15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கம்!
10 Mar,2022
15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கமே தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்து தொடர்ந்து உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவை புறக்கணித்துவிட்டு தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இச்சட்டமூலத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, இச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம்சுமத்தப்படுகிறது என்றார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 ஊடகவியலாளர்களை கொலை செய்த அரசாங்கத்துக்கு இதுபோன்ற சட்டமூலத்தைக் கொண்டுவர இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்