வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால விசாக்களை வழங்கும் இலங்கை
09 Mar,2022
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீண்டகால விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழ்க்கை நடத்தவும் ஊக்குவிக்கும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.