வெள்ளவத்தையில் வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு
26 Feb,2022
கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நெதர்லாந்து பெண் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
66 வயதுடைய பெண் அடுக்குமாடி குடியிருப்பின் குளியலறைக்குள் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நெதர்லாந்து பெண் ஒரு இளைஞருடன் வாடகைக்கு குடியிருப்பில் வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக ஊடக தளமான TikTok மூலம் அவர் இளைஞருக்கு அறிமுகமானவர் என்பது மேலும் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து பெண் அந்த இளைஞரை சந்திப்பதற்காக இலங்கை வந்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் காதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று மாலை காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.