மைத்திரியை நான்காம் மாடிக்கு அழைக்க கோரிக்கை
20 Feb,2022
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் விரும்பினால், முன்னாள்அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நான்காம் மாடிக்கு அழைத்துச் சென்று விசாரித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர மைத்திரிபால சிறிசேனவே ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதேவேளை, சட்டமா அதிபரின் நடவடிக்கையை விமர்சித்த நீதிமன்றம், பிரதிவாதிக்கு அழைப்பாணை விடுக்காமல் அவர்களை விடுதலை செய்ததாக ஐ.தே.க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான குற்றவாளி என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.