அமெரிக்கப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதி கைது
15 Feb,2022
வெளிநாட்டு பயணியான 40 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற முச்சக்கரவண்டி சாரதியை, எல்ல பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், முச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற போதே, முச்சக்கரவண்டி சாரதி மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்றுள்ளார்.
இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதியின் பிடியிலிருந்து தப்பி ஓடிய அமேரிக்க பெண் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, தனக்கேற்பட்ட நிலை குறித்து தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டடையடுத்து, எல்ல பொலிசார் விரைந்து, முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்தனர்.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.