வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்ப புதியவழி
09 Feb,2022
LANKA REMIT என்ற புதிய கையடக்கத் தொலைபேசி செயலி இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
LANKA REMIT செயலியின் மூலம் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தால், பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதன் அவசியத்தையும், முறைசார் நடைமுறைகளை ஊக்கப்படுத்துவதையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.