கொழும்பு மாநகரசபைக்குள் முட்டை வீசி தாக்குதல்
01 Feb,2022
கொழும்பு மாநகரசபைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் நேற்று முட்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் சுற்றாடல் மற்றும் காணி நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதீப் ஜயவர்தனவும் அதே கட்சியின் சமன் அபேகுணவர்தனவும் போட்டியிட்டனர்.
இரகசிய வாக்கெடுப்பில் ஜெயவர்தன 4 வாக்குகளையும், சமன் அபேகுணவர்தன 2 வாக்குகளையும் பெற்றனர். சமன் அபேகுணவர்தனவின் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத, அவருக்கு மிக நெருக்கமான பெண் உறுப்பினர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மிளகாய்த்தூள் கலந்த முட்டை, சிறிய பையொன்றிற்குள் வைக்கப்பட்டு, பிரதீப் ஜயவர்த்தன மீது வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் , அது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.