இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய சுகாதார நடைமுறைகள்
29 Jan,2022
இலங்கையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கொவிட் தொடர்பான புதிய சுகாதார ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த புதிய ஒழுங்குவிதிகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றாளர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய நபர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக இருந்தால், அவருக்கு தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் தென்படாவிட்டால் அவர் தனிமைப்படுத்தல் இன்றி வழமைப் போன்று தனது கடமைகளை செய்ய முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்றாளருடன் தொடர்புடைய நபருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜன் அல்லது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்த ஒழுங்கு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.