சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
28 Jan,2022
சிறிலங்கா அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினையில் தலையிடுவதை தொடர்ந்தும் தாமதம் செய்தால், அந்த பிரச்சினை மேலும் உக்கிரமடைய காரணமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மக்கள் எழுச்சி பெறும் காலம் வந்துள்ளது. அந்த மக்கள் எழுச்சியானது அமைதியான முறையிலும் அகிம்சை வழியிலும் இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடு பாரதூரமான அனர்த்தம் ஒன்றின் விளிம்பில் இருக்கிறது. இதனால், ராஜபக்சவாதம் கூறும் உபதேசங்களை தொடர்ந்தும் கேட்காது மக்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் இருந்தால் தொடர்ந்தும் முன்நோக்கி செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.