கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மற்றுமொரு பாதிப்பு
28 Jan,2022
கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தங்களது இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகருக்குள் நாளாந்தம் சுமார் 35 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளை விட இது மிகவும் சிறப்பாக இருப்ப தாகவும் கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரியான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
தற்போது கொழும்பு நகருக்குள் நாளாந்தம் சுமார் 150 துரித அன்டிஜென் சோதனைகள் எடுக்கப்படுவதாகவும், பரிசோதனைகள் பெரும்பாலும் கெம்பெல் பூங்கா விலுள்ள துரித அன்டிஜென் சோதனை மையத்தில் செய்யப்படுகின்றன.
அதே நேரத்தில் நகரத்துக்குள் செயற்படும் நடமாடும் சேவையும் சோதனைகளை மேற்கொள்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மாதத்தில் இதுவரை 14 கொரோனா தொடர்பான இறப்புகள் மாத்திரமே நகரத்தில் பதிவாகியுள்ளன. பெரும்பாலான இறப்புகள் தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட எடுக்காதவர்களும், சிலர் ஒன்று அல்லது இரண்டு டோஸ் எடுத்தவர்களும் உள்ளனர்.
மேலும் சர்வதேசப் பாடசாலைகளில் 92% ஆன மாணவர்களுக்கும், அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் 50% ஆன மாணவர்களுக்கும் பூஸ்டர் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.