கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய பெண்
24 Jan,2022
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (22) பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
799 கிராம் நிறையுடைய குறித்த தங்க நகைகளின் பெறுமதி 91 இலட்சத்து ஆயிரத்து 646 ரூபாவாகும்.
கண்டியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தங்க நகைகளுக்காக 27 இலட்சத்து 67 ஆயிரத்து 152 ரூபா வரி மற்றும் 10,000 ரூபா அபராதமும் செலுத்துமாறு சுங்கத் திணைக்களம் குறித்த பெண்ணுக்கு உத்தரவிட்டுள்ளது