சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!
16 Jan,2022
ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது.
இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கொவிட் நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடந்த 11 நாட்களில் மொத்தமாக 31,688 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22,771 காணப்பட்டதோடு நவம்பர் மாதம் 44,294 எண்ணிக்கையினரும் டிசம்பர் மாதம் அதன் எண்ணிக்கை 31,688 பதிவாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.