ஒவ்வொன்றாக அம்பலமாகும் பொய்கள்"
15 Jan,2022
ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கையில் கத்தோலிக்க மக்களின் துரதிஷ்டமான தலைவிதியை துடைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை முஸ்லிம் தீவிரவாதிகளின் செயலாக சித்தரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் உண்மை வெளிப்பட்டு வருவதாகவும் கர்தினால் தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள தகவல்கள் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருவதாக கூறிய பேராயர், இந்த மூடிமறைப்பு ரப்பர் பந்தை மூழ்கடிக்கும் முயற்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஈஸ்டர் தாக்குதலின் 1000 ஆவது நாள் நினைவை முன்னிட்டு இன்று காலை தெவத்த லங்கா அபா சுவாமி தேசிய பேராலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே கொழும்பு பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.
கொச்சிக்கடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
இந்தத் தாக்குதல் ஒரு சதி என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்றும், தெரிந்தே தாக்குதலைத் தடுக்க முயலாதது மட்டுமன்றி, அரசியல் ஆதாயங்களுக்காக அதைப் பயன்படுத்தியதாகவும் கர்தினால் கூறினார்.
தாக்குதலுக்கு காரணமானவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கர்தினால் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலை சாக்காக வைத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் கண்ணீரை விற்று, தாக்குதலாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தவர்களின் உண்மை நிலை தற்போது முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.