இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
07 Jan,2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி ஏற்றல் மையம் இலங்கை விமானப்படையால் நிறுவப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்துவரும் இலங்கையர்கள் இந்தத் தடுப்பூசி ஏற்றல் மையத்தில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த தடுப்பூசி மையம், வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு அவர்களின் தடுப்பூசி நிலைக்கு ஏற்ப கோவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் தடுப்பூசியும், முதலாது தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் அங்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு தடுப்பூசியும் பெற்றவர்களுக்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.