இலங்கையில் தேனிலவை களிக்க வந்த இந்திய இளம் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
07 Jan,2022
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ரகல இன்று (ஜன. 06) இந்திய பணக்கார இளம் வர்த்தக தம்பதியருக்கு ரூ.50000 அபராதம் விதித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் தேனிலவை கழிப்பதற்காக நாட்டிற்கு வந்துள்ளதாகவும் வெலிகம கடற்கரையில் ட்ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடித்த போது கைது செய்யப்பட்டதாகவும் வெலிகம காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
சிவில் விமான போக்குவரத்து சட்டத்தின் 103 (03) பிரிவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் வெலிகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.