இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
06 Jan,2022
இந்த ஆண்டின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 11 ஆயிரத்து 380 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, இந்தியா, உக்ரைன், ஜேர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஜகஸ்தான், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.