யாழ் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்
01 Jan,2022
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இன்று (சனிக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அவருடைய விஜயத்தின் போது யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளும் இணைத்திருந்தனர்.
இதன்போது புதுவருடத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.