50 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது 14 எண்ணெய் குதங்களின் குத்தகை!
31 Dec,2021
திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் . மேலும், அதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 51% பங்குகளையும்,லங்கா ஐ.ஓ.சி 49% பங்குகளையும் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, 24 எண்ணெய் குதங்கள் சி.பீ.சி.யின் கீழ் பராமரிக்கப்படும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.