மேலும் 2 இலங்கை தூதரகங்களை மூடும் இலங்கை அரசு: வங்குரோத்து நிலைஸ
29 Dec,2021
வரலாற்றில் முதல் தடவையாக, சம்பளம் கொடுக்க காசு(டொலர்) இல்லாமல், தனது தூதரங்களை இலங்கை அரசு மூடி வருகிறது. அந்த அளவு இலங்கை அரசிடம் டாலர்கள் இல்லை. அன்னியச் செலாவணி இல்லை. இதன் அடிப்படையில் போலந்து மற்றும் சூவிடன் ஆகிய 2 நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களை மூடுவது என்ற தீர்மானத்தை அரசு எட்டியுள்ளதாக மேலும் அறிகிறது. எதிர்காலத்தில் மேலும் பல தூதரங்களை இலங்கை அரசு மூடக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதேவேளை பஞ்ச நாடான பங்களாதேஷிடம் 200 மில்லியன் டாலர்களை, இலங்கை கடனாகப் பெற்று, தற்போது 3 மாதம் ஆகியும் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தக் கடனை 3 மாதத்தில் திருப்பி கட்டவேண்டும் என்ற நிபந்தனையில் தான் பங்களாதேஷ் அரசு கொடுத்து இருந்தது. தற்போதுஸ
இலங்கை அரசு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனை அடுத்து, மேலும் 3 மாத காலம் தவணையை நீடித்துள்ளது பங்களாதேஷ் அரசு.