3 பிள்ளைகளின் தந்தை பாம்பு தீண்டி உயிரிழப்பு – யாழில் பரிதாபம்
29 Dec,2021
யாழ்ப்பாணம், அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தெரியாத வகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதற்கு சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியிருந்தார்.
எனினும் கடந்த 26 ஆம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.