தீர்மானத்தை ஏற்க மறுத்த கனடா, இத்தாலி - தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு
26 Dec,2021
இலங்கையின் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக முதலில் நியமிக்கப்பட்டு, பின்னர் இத்தாலிக்கான தூதுவராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கள டயஸ் தற்போது மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சுமங்கள டயஸின் நியமனத்தை நிராகரித்திருந்தன.
இதன் காரணமாக சுமங்கள டயஸை அரச தலைவர் மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிராக நியமித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ.வி.எம். கபில ஜயம்பதி மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.