வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு சிக்கல்; அரசாங்கம் கடும் நிபந்தனை!
24 Dec,2021
வெளிநாட்டு பிரஜைகள் - இலங்கை பிரஜைகளை திருமணம் செய்வதற்கு மிக இறுக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை ஒரு இலங்கை பிரஜை பதிவுத் திருமணம் செய்யவே இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 2022.01.01 முதல் வெளிநாட்டு பிரஜா உரிமை உடைய ஒருவர் தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கை பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெறவேண்டும்.(Security clearance Report) என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று சுகாதார நிலை பற்றிய ஓர் சுய பிரதிக்கினையும்(Health Declaration) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும்சாதாரண விவாக பதிவாளர்கள் மூலம் பதிவு செய்ய முடியாது. ( கிராம பதிவாளர்கள் ) என்பதுடன், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்களிற்கு இந்த விதிமுறை பொருத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.