847 வெடிப்புகள் பதிவு: 7 பேர் பலி; 16 பேர் காயம்
21 Dec,2021
நாடு முழுவதும் எரிவாயுவுடன் தொடர்புடைய 847 வெடிப்புச் சம்பவங்கள் இந்த வருடம் மட்டும் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் வெடிப்புகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட வெடிப்புகளால் மொத்தமாக 797 சம்பவங்களும் லாஃப்ஸ் எரிவாயு கசிவுகள் தொடர்பாக 50 வெடிப்புகளும் பதிவாகியுள்ளன என்பதுடன், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்றுவரையான காலப்பகுதிக்குள் 18 சொத்துகளும் எரிவாயு வெடிப்புகளால் சேதமடைந்துள்ளன.
எரிவாயு அடுப்பு வெடிப்புகள் காரணமாக 477 சம்பவங்களும் எரிவாயு கசிவு தொடர்பில் 299 சம்பவங்களும் எரிவாயு குழாய் சேதங்கள் தொடர்பில் 52 வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.
ரெகுலேட்டர்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக பதினைந்து சம்பவங்களும் எரிவாயு சிலிண்டர்கள் சேதமடைந்த சம்பவங்கள் இந்த ஆண்டும் பதிவாகியுள்ளன.
எரிவாயு வெடிப்பினால் தலத்துஓயா, மருதானை, வெலிக்கடை, கொட்டாவ, கந்தபொல, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.