யாழ். நயினாதீவில் ஆணின் சடலம் மீட்பு
16 Dec,2021
யாழ்ப்பாணம் – நயினாதீவு – 3 ஆம் வட்டாரப்பகுதியில் இன்று (15) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நயினாதீவு – 2 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 9 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.