மீன்பிடிப் படகில் 250 கிலோ போதைப் பொருளுடன் வெளிநாட்டினர் கைது!
12 Dec,2021
பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற வெளிநாட்டு மீன்பிடிப் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 250 கிலோகிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
06 வெளிநாட்டு சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.