இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது
05 Dec,2021
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த (04.12.2021) ஆம் திகதி வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்ததாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு (DSP) தெரிவித்துள்ளது.
இவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 43 வயதான வர்த்தகர் ஆவார்.
போதைப்பொருட்களை பெட்டிகளில் மறைத்து இரண்டு பார்சல்களாக பிரித்து தான் கொண்டு வந்த பொருட்களுடன் மறைத்து வைத்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் 01 கிலோ 500 கிராம் அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-126 இல் 12/04 அன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் அவற்றை நாட்டிற்கு கடத்திய வர்த்தகர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.