சுமந்திரன் -சாணக்கியனை நடத்திய விதத்தால் நான் கவலை அடைந்துள்ளேன் – நமால்
03 Dec,2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கடுமையாக குரல் கொடுத்துள்ளார். இனம் இனத்தோடு தானே சேரும் என்பார்கள். கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் நடாத்தியிருந்தனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தின் அவர்களை நடாத்திய விதம் கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பிரித்தானியாவில் எந்த ஒரு கூட்டத்தையும் தமிழர்கள் நடத்த விட வில்லை என்பது மேலும் கவலை தரும் விடையம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.