இலங்கைக்குள் புதியவைரஸ் நுழைவதை தாமதப்படுத்த தீவிர முயற்சி!
30 Nov,2021
புதியவைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தாமதிப்பதை தங்களால் செய்ய முடியும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதிய வைரஸ் நாட்டிற்குள் எந்தவேளையிலும் எந்த தருணத்திலும் நுழையலாம் என தெரிவித்துள்ள மருத்துவர் ஹேமந்த ஹேரத் அவ்வாறான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் இதன் மூலம் வைரஸ் நுழைவதை தாமதப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.