ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலங்கை பயணத்தடை விதித்துள்ளது.
28 Nov,2021
தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் பரவி விட்டது.
இந்த வைரஸ் இதற்கு முன் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் வகைகளை விட ஆபத்து மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே உலக நாடுகள் பலவும் இந்த வைரஸ் தங்கள் நாட்டுகள் நுழைவதை தடுக்கும் வகையில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது.
அந்த வகையில் நமது அண்டை நாடான இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்துள்ளது. இந்த தடை இன்று (ஞாயிறு) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், 14,258 பேர் அந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது