இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
24 Nov,2021
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை LANKA QR முறையினூடாக அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கையடக்கத் தொலைபேசிகளில் குறித்த தொகையை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் மூலம், நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தைச் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.