வைத்தியசாலைக்குள் பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள்,
19 Nov,2021
மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிணவறைக்குள் நாக பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பன நுழைந்து பிணங்களை உண்பதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக பிணவறையில் பணிப்புரியும் ஊழியர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பிணவறையின் இரும்பு கதவு உடைந்து சேதமடைந்து இருப்பதே அதற்கு காரணம் என வைத்தியசாலையின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அண்மைய தினங்களில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களில் காது, மூக்கு போன்ற உறுப்புகளை எலிகள் உட்பட விலங்குகள் கடித்து தின்றுள்ளதாக இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தும் மலர்சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிணவறையின் இரும்புக் கதவு சேதமடைந்துள்ளமை இதற்கு காரணம் எனவும் இது குறித்து பல முறை வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.