இலங்கையில் புதிய சோதனை சாவடிகளை திடீரென அமைத்துள்ள அரசாங்கம்!
16 Nov,2021
இலங்கையில் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பியுள்ளது.
நாடு ஏதாவது பாதுகாப்புஅச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் நாடாளுமன்றத்திற்கு வந்தவேளை என்னை பல இடங்களில் சோதனையிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் திடீர் என பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை குழப்புவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்
இலங்கை மீண்டும் முடக்கப்படலாம் என எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னுமொரு முடக்கலை நிராகரிக்க முடியாது என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே சில நாடுகள் முடக்கல் நிலையை அறிவித்துள்ளதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.