தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி
15 Nov,2021
தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி
கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொழிநுட்ப குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான் கொரோனா தொழில்நுட்ப குழுவிடம் கோரியிருந்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் குறித்த குழு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.