வியாழேந்திரனின் அடியாட்கள் 15 பேர் எனது மகனை கட்டி வைத்து அடித்தே கொலை
15 Nov,2021
எனது மகனை அடித்தும் வெடி வைத்தும் கொலை செய்தது மட்டுமல்லாமல் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிறந்த நாள் கொண்டாடுவதும் இரத்ததான நிகழ்வும் செய்வதாக பாலசுந்தரத்தின் தந்தையர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பாலசுந்தரத்தின் தந்தையர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
'எனது மகனை வியாழேந்திரனின் அடியாட்கள் 15 பேர் சேர்ந்து கட்டி வைத்து அடித்து கொலை செய்தது மட்டுமல்லாமல் இறந்தவர் மீதுவெடிவைத்து சுட்டுள்ளனர். எனது மகன் இறந்ததும் இராஜாங்க அமைச்சர் ஏணி வைத்து மதில் மேல் குதித்து தப்பி சென்றுள்ளார்.
எங்களது மகனின் வழக்கை சுமந்திரன் மற்றும் வெளிநாட்டு அரசாங்கம் என்றாலும் கையில் எடுத்து ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
'எங்களுக்கு போலீஸார் மீது நம்பிக்கை இல்லை எனது மகனை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனர் .
குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேசமயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விதுஷனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கைகள் அடித்து கொலை செய்து தான் அவர் இறந்துள்ளதாக வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.