சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை நீக்கியது பஹ்ரைன்
13 Nov,2021
கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.