அடித்துக் கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்!
05 Nov,2021
மவுன்ஜீன் தோட்டத்தில் பெண்ணொருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை தடுப்பதற்கு சென்ற நிலையிலேயே குறித்த பெண் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.