வல்வெட்டித்துறையில் இராணுவத்தினரால் 12 பேர் கைது!
30 Oct,2021
வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் உட்பட்ட கூரிய ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினரால் இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைதானவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கைதானவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.