வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு வெளியான தகவல்!
30 Oct,2021
இலங்கை திரும்பும் போது கொரோனா தொற்று உறுதியாகும் இலங்கையர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர்.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் வீடுகளில் சிகிச்சை அளிக்கும் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் மல்காந்த கல்ஹென இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான இலங்கையர்கள் இவ்வாறு வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் தொற்று உறுதியாகும் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதியாகும் நபர்குள் 1390 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும் என டொக்டர் மல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.