கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் PCR பரிசோதனை!
27 Oct,2021
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துதில் அண்மைக்காலமாக மூடப்பட்டு இருந்த PCR மருத்துவ ஆய்வுக்கூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டு இலங்கைக்கு வரும் பயணிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையிலிருந்து புறப்படுபவர்களுக்கும் இங்கு PCR பரிசோதனைகள் செய்யப்படலாம் என மருத்துவ ஆய்வகத்தின் மேலாளர் சுமுது சரசிஜா தெரிவித்தார்.
ஒவ்வொரு PCR பரிசோதனைக்கும் US $ 40 (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
3 மணி நேரத்திற்குள் பயணிகளுக்கு முடிவுகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 02.15 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் குழுவொன்று இன்று (27) பிசிஆர் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..