சவேந்திர சில்வாவுக்கு ரஷ்யாவில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை!
27 Oct,2021
ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு (Shavendra Silva) மகத்தான வரவேற்று வழங்கப்பட்டுள்ளது என இராணுவ ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிற்கு ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவுடனான (Oleg Salyuko) உள்ளக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது, இருதரப்பு நலன்புரி செயற்பாடுகள், சிறிலங்கா முப்படையினருக்கான பயிற்சி தளங்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல், இராணுவ கூட்டு பயிற்சிகள், இயந்திர மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலான கருத்து பரிமாற்றங்களும் இடம்பெற்றன.