கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல்
24 Oct,2021
தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன(Wikramabaku Karunaradna).
இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் - தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும்.
பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.
அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.