நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டேன் -
23 Oct,2021
நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய(Gotapaya Rajapaksa) ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முற்றிலும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி, குருநாகல் உடுபெத்தேவ என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை ஒன்றைப் பார்வையிட்ட பின்னரே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் கூட இயற்கை விவசாயத்துக்கு மாறும் கடினமான பணியை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஆராய்வதற்காக மட்டும், தாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக இந்த நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே தாம் நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.