மஹிந்தவை அவமானப்படுத்தி அடித்து விரட்டுவது போன்று சித்தரித்த
19 Oct,2021
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அநுராதபுரம் மக்கள் முன்னெடுத்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajabaksha) போன்று வேடமிட்டுவந்த ஒருவரை அடித்து விரட்டுவது போல சித்தரித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி அநுராதபுரம் ரம்பேவ சங்கிரிகம சிரிபோபுர பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று முகமூடியை அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் வேடமிட்டு அங்கு வந்துள்ளார். இதைக் கண்ட ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அவமானப்படுத்தி, தாக்கி அங்கிருந்து விரட்டியடித்து அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் மீதான தமது வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இதனை திட்டமிட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.