இலங்கைக்குள் அமெரிக்க ராணுவத்தை இறக்கிய கொலின் பவன் கொரோனாவல் இறந்தார் !
19 Oct,2021
இலங்கையை 2004ம் ஆண்டு சுணாமி தாக்கிய வேளை, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. அன் நிலையில் 2005ம் ஆண்டு இலங்கைக்கு உதவ என்று அமெரிக்க படைகளை கொண்டு வந்து சேர்த்தார் கொலின் பவல். அவரே அமெரிக்காவின் முதல் கறுப்பின உள்துறைச் செயலாளர். அமெரிக்காவில் மிகவும் சக்த்தி வாய்ந்த பதவியில் இருந்த கொலின் பவல், இதுவரை 2 அமெரிக்க ஜனாதிபதிகளோடு இணைந்து பணி புரிந்துள்ளார். இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தை நிலவிய காலகட்டத்தில் அவர் அமெரிக்க ராணுவத்தை இலங்கையில் நிலை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம். இலங்கை சீனாவின் வாலை பிடிக்கும் என்று முன்னரே அவர் கணக்குப் போட்டு இருந்தார் என்றே சொல்லலாம். அதனை தடுக்க அவர் அன்றைய தினம் 25 மில்லியன் நிதியுதவியையும் அறிவித்தார்.
அந்த அளவு சமயோசித புத்தியுள்ள மனிதர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவரை கொரோனா தாக்கி. அதன் பாதிப்பால் 84 வயதில் மரணமடைந்து விட்டார்.