விழி பிதுங்கி நிற்க்கும் ராஷபக்ஷ குடும்பம் !
13 Oct,2021
சிலிண்டர் ரூ.2675 – பால் 1 லிட்டர் ரூ.250ஸ ஜெட் வேகத்தில் உயரும் விலை : விழிபிதுங்கி நிற்கும் இலங்கை மக்கள். 2009ம் ஆண்டுக்கு பின்னர், இலங்கைக்கு காசை அள்ளி அள்ளி கொடுத்த விடையம் சுற்றுலாத் துறை தான். மாதம் தோறும் பல லட்சம் வெளிநாட்டவர்கள் இலங்கை சென்று வர ஆரம்பித்தார்கள். இதனை நம்பி, தெயிலை, ரப்பர் கறுவா என்று ஏற்றுமதி செய்யக் கூடிய பொருட்களை கூட இலங்கை அரசு சரியாக ஏற்றுமதி செய்யவில்லை. காசு சுற்றுலாத் துறையால் கொட்டோ கொட்டென கொட்டியது. ஆனால் 2019 முதல் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தால், இலங்கைக்கு யாரும் சுற்றுலா செல்லவில்லை. இன் நிலையில் கடந்த 2 வருடமாக இலங்கை அரசு, பெரும் வீழ்ச்சி கண்டு. வெளிநாட்டு காசுகள் எதுவும் இன்றி, கஜானா காலியாகி பாரிய நெருக்கடியில் உள்ளது.
இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்னல் வேகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ.1400க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நான்கே நாட்களில் அதிரடியாக உயர்ந்து ரூ.2657க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்கப்படுகிறது. இதுவே சில்லறை விலையில் ரூ.1195க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் சிமென்ட் போன்ற பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
இருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் அதிபர் கோத்தபய ராஜபக்வுக்குஷ எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இலங்கையில் இதே நிலை தொடர்ந்தால் விரைவிலேயே அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் முறையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளார்கள். ஆனால் இதனை எந்த ஒரு மீடியாவும் பயம் காரணமாக பிரசுரிக்கவில்லை. இருப்பினும் சிங்கள மக்கள் மத்தியில், கோட்டபாயவின் செல்வாக்கு பெரும் அளவில் சரிந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.