இலங்கையில் மேலும் 1297 பேருக்கு கொரோனா
19 Sep,2021
இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 2 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 இலட்சத்து 32 ஆயிரத்து 38 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.