தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் வரை நீடிப்பு
17 Sep,2021
நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு படிப்படியாக நீடிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் திங்கட் கிழமை (21) தளர்த்தப்படவிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு, கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று (17) காலை இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.