இலங்கையில் அதிகபடியான கொவிட் உயிரிழப்புக்கள் - இன்று 156
12 Aug,2021
கொவிட் வைரஸ் பரவலின் பாதிப்பு காரணமாக இந்தியாவை விட மோசமான நிலைக்கு இலங்கை மாறியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்த கொரோனா மரணங்களின் எண்ணக்கை அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளா்.
அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 344,499 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 302,455 ஆக அதிகரித்துள்ளது.