முகக்கவசங்களாலேயெ கொரோனா பரவும் ஆபத்து அதிகம்
12 Aug,2021
-
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அந்த முகக்கவசங்களாலேயே கொரோனா பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதாக டாக்டர் திருமதி. அஜந்த பெரேரா எச்சரிக்கிறார்.
மருத்துவமனைகளில் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் கையுறைகளை முறையாக அழிக்கும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுவதால், அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து கழிவுகளை அகற்றும் ஊழியர்களும் வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
பயன்படுத்திய முகக்கவசங்களை அகற்றுவதற்கான மூன்று முறைகளையும் அவர் விளக்கினார்.
1. முகக்கவசங்களை எரித்தல்
2. அகற்றுவதற்கு முன் கிருமிநாசினியால் சுத்தம் செய்யவும்.
3. அகற்றுவதற்கு முன் சூடான கொதி நீரில் கழுவவும்.
இவற்றில் முகக்கவசங்களை எரிப்பதே சிறந்தது என்றும் அஜந்த பெரேரா குறிப்பிட்டார்