தடுப்பூசி செலுத் தி நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு – நாமல்
02 Aug,2021
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாக திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து கண்டியில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் நாட்டை முளிமையாக திறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டவை அல்ல என குறிப்பிட்டார்.
மேலும் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் நேரத்தில் படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.